தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அதிமுக-வில் ஒற்றை தலைமை தான் சிறந்த தீர்வாக இருக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாயத் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.