​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரோடு குழிக்குள் விழுந்த டாக்டர் : மழைநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட குழியை மூடாததால் விபரீதம்

Published : Jun 08, 2022 5:19 PM



காரோடு குழிக்குள் விழுந்த டாக்டர் : மழைநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட குழியை மூடாததால் விபரீதம்

Jun 08, 2022 5:19 PM

சென்னையில், மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், மருத்துவர் ஒருவர் காரோடு அந்த குழியில் விழுந்தார்.

அடையாறு கஸ்தூரி பாய் நகரில் இயங்கி வந்த நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் எடுத்து விட்டு வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்ட நாகமல்லையா என்ற அந்த மருத்துவர், மழைநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட குழிக்குள் காரோடு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று காரில் இருந்த மருத்துவரை மீட்டனர். ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின் கிரேன் மூலம் கார் வெளியே எடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகாலுக்காக நேற்று மாலை வெட்டப்பட்ட குழியை மூடாமல் வைத்ததுடன், அது குறித்து எவ்வித அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படாததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.