இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் இத்திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 நிறுவனங்களும் சுமார் 3 ஆயிரத்து 300 ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
வாரத்தில் 4 நாட்கள் பணிபுரிந்தாலும் முழு ஊதியத்தையும் வழங்க அனைத்து நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஊதிய இழப்பு இல்லாத இந்த திட்டம் தொழிலாளர்கள் நலனையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதில் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பது குறித்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியாளர்கள், பாஸ்டன் கல்லூரி வல்லுநர்கள் ஆய்வு நடத்தவுள்ளனர்.