நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தி உள்ளது.
70 நிறுவனங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து 300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்டவைகளை கூடுதல் நாள் விடுமுறை மூலம் பணியாளர்கள் கையாள்வதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.