இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
2020 கொரோனா முதல் அலையில் விதிமுறைகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டது உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய போரிஸ் ஜான்சன் சொந்த கட்சி உறுப்பினர்களிடயே அதிருப்தியை சம்பாதித்தார்.
அவருக்கு எதிராக சொந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே புகார் அளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 211க்கு 148 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார்.