அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் ப்ளூ ஆர்ஜின் நிறுவன விண்கலத்தில் 6 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியது.
மேற்கு டெக்சாசில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர்.
கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர். பின்னர் அவர்கள் சென்ற கேப்சியுல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.