குற்றவாளிகள் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் தொடர்பான வழக்கில் சோனியாவும் ராகுலும் விசாரணைக்கு நேரில் 8 ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மூடப்பட்ட வழக்கை மறுபடியும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு விசாரணைக்கு எடுப்பதாக காங்கிரஸ் சாடியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் முகத்தில் இருக்கும் கறையைத் துடைக்காமல் கண்ணாடியில் உள்ள கறையைத் துடைக்க முயற்சிப்பதாகக் கூறினார்.