நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லார் வடிகாலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தூர்வாரும் பணிக்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 கோடியே 46 லட்சம் மதிப்பிலான தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்றிரவு வேளாங்கண்ணி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை ஆய்வு செய்தார்.
அங்கு வைக்கப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர், வேளாண் துறை சார்பில் குறுவை சாகுபடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதைநெல், பூச்சிக்கொல்லி மருந்து, நாற்றங்கால் வைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டார்.