ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
2015-16ஆம் ஆண்டில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து, ஹவாலா முறையில், சத்யேந்தருக்கு சொந்தமான நிறுவனங்கள் 4 கோடியே 81 லட்ச ரூபாயை மோசடியாக பெற்றதாக அமலாக்கத்துறையின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை, நிலம் வாங்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும், பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 4 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஏப்ரலில் முடக்கப்பட்டது. இது குறித்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.