பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தபோது மாநிலங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயமடைந்ததாகவும், அதனால் மதிப்புக் கூட்டு வரியை அவை குறைக்கலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை, உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி, இவற்றின் மூலம் மத்திய மாநில அரசுகள் பெற்ற வருவாய் ஆகியன குறித்து ஸ்டேட் வங்கி ஒரு ஆராய்ச்சி செய்துள்ளது. அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தபோது மதிப்புக் கூட்டு வரியால் மாநில அரசுகள் 49 ஆயிரத்து 229 கோடி ரூபாய் ஆதாயமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இப்போது உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு 15 ஆயிரத்து 21 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.