நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் ட்ரோன் மூலம் தபால்களை இந்திய அஞ்சல் துறை அனுப்பி உள்ளது.
கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து ட்ரோன் மூலம் நெர் கிராமத்திற்கு தபாலை இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் அனுப்பினர்.
மத்திய தகவல் தொடர்பு துறையின் வழிகாட்டுதலின் படி சோதனை அடிபடையில் செலுத்தப்பட்ட ட்ரோன் 46 கிலோ மீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடந்து மருத்துவ பார்சலை டெலிவரி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் தபால் விநியோக முயற்சி வெற்றி பெற்ற நிலையில் வருங்காலத்தில் ட்ரோன்களை பயன்படுத்தி தபால்களை விநியோகிக்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.