​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? பாஜக தலைவர்கள் ஆலோசனை..!

Published : May 24, 2022 7:42 AM

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? பாஜக தலைவர்கள் ஆலோசனை..!

May 24, 2022 7:42 AM

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக பாஜக உயர்மட்டத் தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அல்லது சரத்பவார் எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில் பாஜகவின் உயர்மட்டக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இதில் கலந்துக் கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விவாதத்தில் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 57 காலியிடங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.