டெல்லி குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் முடிவு எதையும் எடுக்கவில்லை என மத்தியப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
238 அடி உயரமுள்ள குதுப் மினாரை விஷ்ணுத் தம்பம் என்றும், அந்த வளாகத்தில் இந்துக் கடவுள்கள் சிலை காணப்படுவதாகவும் பல்வேறு இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் மத்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் குதுப் மினார் வளாகத்தில் சனியன்று ஆய்வு செய்தனர்.
இதனால் குதுப் மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.