குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் மருந்துத் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாகப் போராடினர்.
கலோல் என்னுமிடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் மருந்து ஆலையில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கரும்புகையுடன் மூண்டெழுந்த தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
ஞாயிற்றுக்கிழமை ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.