மேற்கு ஜெர்மனியை கடுமையான சூறாவளிக்காற்று தாக்கியுள்ளது.
ஜெர்மனியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உயர் வெப்பநிலை நிலவி வருவதற்கு மத்தியில், வீசிய சூறாவளிக்காற்று வடக்கு ரைன் - வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன.
பாடெர்பான் (Paderborn) நகரை தாக்கிய சூறாவளியால் குடியிருப்புகள் சேதமடைந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததிலும் வெள்ளிக்கிழமை 10 பேர் காயமடைந்தனர். இதுவரை மொத்தம் 30 பேர் காயம் அடைந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.