நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இறைச்சி விற்கும் கடைகளில் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 310 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, நாகையில் வெளிப்பாளையம், வண்டிபேட்டை, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது வண்டிபேட்டை பகுதியில் சேக் தாவூத் என்பவருக்கு சொந்தமான இறைச்சி குடோனில் இருந்து கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சியையும், திருக்குவளையில் உள்ள ஒரு கடையில் ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.