​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் - ரஷ்யா போர்: நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர் - அதிபர் செலன்ஸ்கி!

Published : May 06, 2022 11:44 AM

உக்ரைன் - ரஷ்யா போர்: நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர் - அதிபர் செலன்ஸ்கி!

May 06, 2022 11:44 AM

போரால் உக்ரைனின் மருத்துவகட்டமைப்பு சேதமடைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்யமுடியாமலும், கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருவதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்காக, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கானொளி மூலம் பேசிய செலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதலால் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது போர் உக்கிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனில் சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.