​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜக - இடதுசாரி மாணவர்களிடையே மோதல்.!

Published : Apr 11, 2022 6:41 AM

டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜக - இடதுசாரி மாணவர்களிடையே மோதல்.!

Apr 11, 2022 6:41 AM

டெல்லியின் ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்களில் இடதுசாரிகள் மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களிடையே ராம நவமி நிகழ்ச்சியை ஒட்டி மோதல் வெடித்தது.

ராம நவமியன்று இறைச்சி உணவு சமைக்கக் கூடாது என்று மாணவர்கள் சிலர் சமையல்காரரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு இடதுசாரி மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து இருதரப்பிலும் மோதல் உருவானது.

இதே போல் பல்கலைக் கழக வளாகத்தில் ராமர் பூஜை நடத்த இடதுசாரி மாணவர்கள் தடுத்ததாக பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி புகார் தெரிவித்துள்ளது.

இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.