கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நகராட்சிக்கு உட்பட்ட வாடகை கடைகள் சுமார் 352 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளாக கடை வாடகை மற்றும் இருப்புத் தொகை சுமார் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டும் நிலுவையில் உள்ள வாடகை தொகையை முறையாக செலுத்தாத சுமார் 15 கடைகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவிற்கிணங்க சீல் வைக்கப்பட்டது.