சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண அசாம் - மேகாலயா மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
1972ஆம் ஆண்டு அசாமில் இருந்து மேகாலயா பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்கள் இடையே எல்லையை நிர்ணயம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
அசாமும், மேகாலயாவும் சுமார் 884 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், முதற்கட்டமாக பிரச்சனைக்குரிய 6 இடங்களில் பரஸ்பரம் தீர்வு காண இரு மாநிலங்களும் வரைவு தீர்மானத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தன.
அதன் அடிப்படையில், எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் இரு மாநில முதலமைச்சர்களும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்திட்டனர்.