நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள டென்மார்க் தூதரகம் மூவர்ணத்தில் ஒளிரவிடப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாடப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதையொட்டி டெல்லியில் உள்ள டென்மார்க் தூதரகம் இந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மின்விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அந்த கட்டிடம் தொடர்ந்து தேசியக்கொடியின் நிறத்திலேயே காணப்படும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.