​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published : Feb 23, 2022 3:19 PM



முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Feb 23, 2022 3:19 PM

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை  ஜார்ஜ் டவுன்  நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று திமுக நிர்வாகியை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கிலும் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை, மார்ச் 9 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கொலை முயற்சி பிரிவையும் போலீசார் சேர்த்துள்ளனர்.