நெல்லை மாவட்டத்தில், பயணியைத் தாக்கி பணத்தைப் பறித்த புகாரில் அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கைது செய்யப்பட்டனர்.
நான்குநேரியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வள்ளியூரில் பேருந்தில் ஏறியுள்ளார். நாகர்கோவிலில் இருந்து குமுளிக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தின் ஓட்டுநர், அவர் இறங்க வேண்டிய நாங்குநேரியில் நிறுத்தாமல் 15 கிலோ மீட்டர் தூரம் கடந்தபின் நிறுத்தியுள்ளார்.
இதனால் ஓட்டுநர், நடத்துனருடன் கணேஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர், கணேஷ்குமாரிடம் இருந்த செல்போன், 4ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி ஓட்டுநர், நடத்துனரைக் கைது செய்தனர்.