டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டெல்லியில் நேரடி வகுப்புகள் நடைபெறும் நிலையில், மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 50 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டர்கள் என துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும் ஒரே நேரத்தில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகள் தங்கள் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.