பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தாதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பெண் பதவியேற்பு
Published : Oct 20, 2021 4:17 PM
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தாதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பெண் பதவியேற்பு
Oct 20, 2021 4:17 PM
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த வளர்மதி வேலு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அங்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அரசி மாதையனும், அதிமுகவை சேர்ந்த வளர்மதி வேலுவும் போட்டியிட்டனர். இதில் வளர்மதி வேலு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு திமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.