ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என கேள்வி எழுப்பினார்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என கூறி வருகிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் பதிலளித்தார்.