தமிழ்நாட்டில், ராணுவ தொழில்வழித்தடம் அமைப்பதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் - யோகி ஆதித்யநாத்
Published : Mar 31, 2021 3:30 PM
தமிழ்நாட்டில், ராணுவ தொழில்வழித்தடம் அமைப்பதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் - யோகி ஆதித்யநாத்
Mar 31, 2021 3:30 PM
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், இராமநாதபுரம் பாஜக வேட்பாளர் குப்புராம் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
விருதுநகரில், அனைவருக்கும் அன்பு வணக்கம் எனத் தமிழில் கூறி பரப்புரை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு புண்ணிய பூமி என்றும், சிறப்பான பண்பாடு கலாச்சாரங்களை கொண்டது என்றும் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் தொன்மையான பாரம்பரியமிக்க தமிழ்மொழி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இடம்பெற வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், ராணுவ தொழில்வழித்தடம் அமைப்பதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக புளிய குளம் விநாயகர் கோவிலில் யோகி ஆதித்யநாத் தரிசனம் செய்தார். அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற ராஜவீதி திடல் வரை இருசக்கர வாகனங்களில் பாஜகவினர் பேரணியாக சென்றனர்.