​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்

Published : Feb 04, 2021 1:30 PM

டெல்லியில் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்

Feb 04, 2021 1:30 PM

டெல்லி காஸிபூர் எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக கூட்டணி எம்பிக்களை போலீசார் தடுத்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

கனிமொழி தலைமையில் தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணி எம்பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சரும் சிரோன்மணி அகாலிதள எம்பியுமான ஹம்சிம்ரத் கவுர், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, திரிணமூல் எம்பி சவுகதா ராய் உள்ளிட்டோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்றனர்.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதனால் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதனிடையே, விவசாயிகளை தடுக்க காஸிபூர் எல்லை சாலையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஆணிகள் அகற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.