​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கத் தயார் -மத்திய அரசு அறிவிப்பு

Published : Jan 20, 2021 9:04 PM

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கத் தயார் -மத்திய அரசு அறிவிப்பு

Jan 20, 2021 9:04 PM

வேளாண் சட்டங்களை ஒன்றைரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 10 வது கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது,வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என அவர் யோசனை தெரிவித்தார். இதுகுறித்து 21ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய கிஷான் சபா கூறியுள்ளது.

இதையடுத்து வருகிற 22 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இதில் முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.