​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறையில் இருந்து வந்த பிறகு சசிகலாவிற்கு மறுபடியும் அதிமுகவில் இடம் இல்லை - முதலமைச்சர் விளக்கம்

Published : Jan 19, 2021 12:38 PM

சிறையில் இருந்து வந்த பிறகு சசிகலாவிற்கு மறுபடியும் அதிமுகவில் இடம் இல்லை - முதலமைச்சர் விளக்கம்

Jan 19, 2021 12:38 PM

சசிகலாவுக்கு இனி 100 சதவீதம் அதிமுகவில் இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் எடப்பாடி சந்தித்து பேசினார். இதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். தமிழகத்தில் இரு புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவியை உடனடியாக வழங்கிட கோரிக்கை வைத்ததாகவும் அவர் கூறினார். 

பிரதமர் மோடியிடமோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமோ அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மட்டுமே பேசப்பட்டது என்றார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி அதை திட்டவட்டமாக மறுத்தார்.