குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பிரதமர் மோடியாவார். ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான மோடி நேற்றைய கூட்டத்தில் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொரார்ஜி தேசாய் முன்பு இந்த அமைப்புக்கு தலைமை வகித்தார். எட்டாவது தலைவராக பிரதமர் மோடி இத்தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மோடியின் பெயரை மற்றொரு அறங்காவலர் உறுப்பினரான அமித் ஷா முன்மொழிய அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதாக கோவில் அறங்காவலர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.