அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு
Published : Jan 18, 2021 7:31 PM
அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு
Jan 18, 2021 7:31 PM
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அசாமுக்கு தேர்தல் ஆணையக்குழு சென்றுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செல்கிறார்கள்.
அவர்கள் இன்று அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் ஆய்வு மேற்கொண்டனர். 20-ந் தேதி மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார்கள். துணை தேர்தல் கமிஷனர் சுதிப் ஜெயினும் மேற்கு வங்காள பயணத்தில் இணைந்து கொள்கிறார்.