டெல்லியில் தொடங்கியது ராணுவ கமாண்டர்கள் மாநாடு : நான்கு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் முப்படை தளபதிகள் பங்கேற்பு
Published : Oct 26, 2020 6:26 PM
டெல்லியில் தொடங்கியது ராணுவ கமாண்டர்கள் மாநாடு : நான்கு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் முப்படை தளபதிகள் பங்கேற்பு
Oct 26, 2020 6:26 PM
இந்திய ராணுவ கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் தொடங்கி உள்ளது.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ராணுவ துணை தளபதிகள், கமாண்டர்கள், ராணுவ தலைமை அலுவலகத்தின் முதன்மை அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர்.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் ராணுவத்திற்கான புதிய யுக்திகளை வடிவமைப்பது, ராணுவ கொள்கைகளை புதிதாக்குவது, உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக ராணுவ செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் ராணுவ மனிதவள மேம்பாடு குறித்த நிகழ்ச்சி இடம் பெற்றது. நாளைய கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை நிகழ்த்துவார் என்றும், முப்படைகளின் தலைமை தளபதிகளும் பேசுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நாளின் போது கமாண்டர்கள், முதன்மை அதிகாரிகள் முன் வைக்கும் திட்டங்கள் குறித்த விவாதமும், இறுதி நாளில் எல்லை சாலை அமைப்பு துறை இயக்குநர் ஜெனரலில் உரையும் இடம் பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.