RECENT NEWS

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க மோதிரம் அணிவிப்பு
"மருத்துவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடுங்கள்" - கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

"மருத்துவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடுங்கள்" - கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

May 11, 2023

2724

மருத்துவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும் என்று கேரள அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையாகி அரசு தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற ஆசிரியரான சந்தீப் என்பவன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொன்றான்.இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சந்தீப்பின் செயல்பாடுகள் அசாதாரணமாக இருப்பதை அறிந்தும் போலீசார் ஏன் உரிய கண்காணிப்பை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியது.வந்தனா கொல்லப்பட்ட சம்பவம், கேரள அரசின் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு தோல்வி என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.போராடும் மருத்துவர்களுக்கும், அவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மாநில டி.ஜி.பி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

BIG STORIES

எல்லாரும் ஏஞ்சல் ஆயிற முடியுமாடா..? பைக்கில் கெத்து காட்டிய பொண்ணுங்க.. பைக்கை பறிகொடுத்த வேட்டி பாய்ஸ்..! அபராதமாக பழுத்தது ரூ 1,40,000

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News