​​
Polimer News
Polimer News Tamil.

ஓராண்டாகியும் கிடைக்காத பயிர் காப்பீட்டுத் மற்றும் இழப்பீடு தொகை - விவசாயிகள் போராட்டம்

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை கூட பெற்றுத் தரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்திற்கு வரும் 14 ஆம் தேதி துணை...

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்..

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றுவருகின்றது. டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா  தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் . பின்னர்,டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை...

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு வெளியூருக்கு அழைத்து சென்ற இடத்தில், மாணவிகளை பீர் குடிக்க வைத்து உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பள்ளி...

கோவிலில் கைவரிசை காட்டியவருக்கு போலீசார் வலைவீச்சு..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நள்ளிரவில் ஒரு கோவிலில் திருட முயன்ற நபர், சூலாயுதத்தை உடைத்து எடுத்த நிலையில் கதவின் பூட்டை உடைக்க முடியாததால் மற்றொரு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜபாளையம் வீரகாத்தம்மன் ஆலயத்தில் இரவு...

விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மற்ற இலவசங்களை வழங்குவதை விட, விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்றையும் இலவசமாக வழங்கினால் நாடு முன்னேற்றமடையும் எனத் தெரிவித்தார். இவ்விழாவில்...

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தையொட்டி, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, நாளை முதல் 16 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல்...

2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி

தமிழகத்தில் 2 ஆயிரத்து 300ஆக இருந்த ஸ்டாட் அப் நிறுவனங்கள் 9 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் தா.மோ அன்பரசன், விரைவில் துணை முதல்வர் தலைமையில் ஸ்டாட் அப் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் என்றார்.  சென்னை ஐ.ஐ.டி சார்பில்...

பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இணைந்து பாம்பன் சாலை பாலத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு...

டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!

சென்னையில் டைடல் பார்க் சிக்னல் அருகே தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய யூ - டர்ன்...

" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்

கொள்கைகளின் அடிப்படையில் தான் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவசியம் இல்லை, பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்று கூட ஒன்றிணையலாம் என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை, மயிலாப்பூரில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத்...