செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு : இ.பி.எஸ்
சிறைக்கைதிக்கான எண் வழங்கப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தவறான முன்னுதாரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த அவர், ஊழல் செய்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்.
தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று சென்னையில் அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு, 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் தான் கட்சியினர் பணியாற்றி வருவதாக இ.பி.எஸ். பதிலளித்தார்.
அதேபோல், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியல் பேச உரிமை உள்ளதாகவும் நடிகர் விஜய்யின் பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Comments