காதலியிடம் அடிவாங்கிய காதலன்.. காதலித்து ஏமாற்றிய காதலனை கட்டையால் தாக்கிய காதலி

0 3960

ஆந்திர மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனை, காதலி கட்டையால் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

கர்னூல் மாவட்டத்திலுள்ள சின்னத்தெக்கூர் கிராமத்தை சேர்ந்த லாவண்யாவும், சீனிவாசனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனிவாசன் சிலநாட்களாக லாவண்யாவுடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில், சந்தேகமடைந்த அப்பெண் ஊர் மந்தைக்கு வருமாறு காதலனை அழைத்துள்ளார்.

அங்கு வந்த காதலனிடம் அருகிலிருந்த கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தியதாகக்கூறப்படுகிறது.  அதற்கு முடியாதென காதலன் மறுக்கவே அங்கிருந்த பெரிய கட்டையைக் கொண்டு காதலனை துரத்தி துரத்தி தாக்கத்துவங்கினார்.இக்காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments