Polimer News
சற்றுமுன் முக்கிய செய்தி விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

உலகக்கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரானது மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்சில் தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் விளையாடும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அணியின் தலைவர் விராட் கோலி, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் ஆலோசனையை தொடர்ந்து இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திரசிங் தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதேவேளையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை.

ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மகேந்திரசிங் தோனி விளையாடும் 4வது உலகக்கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Polimer News