Polimer News
இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரபேல் கிராமம்

சத்தீஸ்கரில் உள்ள ரபேல் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆளும் பா.ஜ.க அரசு மீது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் மக்களவை தொகுதியின் கீழ் வரும் ரபேல் என்ற கிராமத்தின் மக்கள் அந்த பெயரை மாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தால் உங்கள் கிராமத்தையும் விசாரணை செய்வார்கள் என்று மற்ற கிராம மக்கள் ரபேல் கிராமத்தை சேர்ந்தவர்களை கிண்டல் செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த பெயரால் அக்கிராமத்திற்கு எதிர்மறையான கவனம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

குறிப்பாக இந்த பெயரால் அக்கிராமத்திற்கு எதிர்மறையான கவனம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related posts

Polimer News