Polimer News
தமிழ்நாடு

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

கள்ளளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மதுரை சித்திரை திருவிழா வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும் மதுரைக்கு தண்ணீர் செல்லும் வகையில்  மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து  வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு 19ம் தேதி மாலை தண்ணீர்  நிறுத்தப்பட உள்ளது.  71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது  41.69 அடியாக உள்ளது.

Related posts

Polimer News