சிரியா உள்நாட்டுப் போர் - 2 மாதத்தில் 5.20 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்
Published : Feb 05, 2020 8:39 AM
சிரியாவில் போராளிக் குழுக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் காரணமாக கடந்த 2 மாதங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் போராளிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இந்நிலையில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதியில் இருந்து நடந்து வரும் தாக்குதல்களால் இட்லிப் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இவர்களில் 80 விழுக்காடு பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கருத்துக் கூறியுள்ள ஐநா, அங்கு எஞ்சியிருப்பவர்கள் மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.