​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்தியானந்தா விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை

Published : Feb 05, 2020 8:31 AM

நித்தியானந்தா விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை

Feb 05, 2020 8:31 AM

நித்யானந்தா தரப்பு ஆர்த்தி ராவ் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பெங்களூரு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது

 நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் தொடர்ந்த பாலியல் வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதேபோல் காப்புரிமை பெற்ற யோகாசன கலைகளை சட்டவிரோதமாக ஆர்த்திராவ் பயன்படுத்துவதாகவும் எனவே அவர், 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நித்தியானந்தா தரப்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு ஆர்த்தி ஆஜராகததால், நித்தியானந்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அமல்படுத்தி நஷ்ட ஈடு தொகையை பெற்றுத் தர உத்தரவிடக் கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தரப்பு முறையிட்டது. தீர்ப்பு தொடர்பாக தங்களுக்கு சம்மன் எதுவும் வரவில்லை என ஆர்த்தி தரப்பு வாதிட்டதை அடுத்து தற்காலிக தடை விதிக்கப்பட்டது.