சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூர் நகரில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அப்போது சல்மான் கானும் மேடையில் இருந்தார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னான்டசும் நிகழ்வில் பங்கேற்றார்.
ஆஸ்கர் விருதுகளுக்கான எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை ஆவலுடன் சில நாட்களுக்கு காத்திருக்க வைத்துள்ள நிலையில் இந்தியாவின் ஆஸ்கர் விருதுகள் என கூறப்படும் IIFA விருதுகள் விழாவை இந்தூர் நகரில் பிறந்த சல்மான் கான் தன் சொந்த ஊரில் தொகுத்து வழங்க இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
மார்ச் 27 முதல் 29 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். கிட்டதட்ட இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் இதில் பங்கேற்க உள்ளனர்.