கேரளாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கூலிவேலை செய்த வந்த மேற்குவங்க மாநிலத்தவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
மற்ற மாநிலங்களை காட்டிலும், கூலி தொழிலாளர்களுக்கு கேரளாவில் அதிகசம்பளம் வழங்கப்படுவதால், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வாடகைக்கு அறைஎடுத்து அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளதை அறிந்த இவர்களது உறவினர்கள், சொந்த ஊர்களுக்கு உடனடியாக வருமாறு அறிவுறுத்துவதால், தங்களது பணிக்கான சம்பளத்தை அவசர, அவசரமாக பெற்றுக்கொண்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.