உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பி.கே.பட் பெயரை 3 முறை பரிந்துரை செய்த கொலீஜியம்
Published : Feb 05, 2020 8:12 AM
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பி.கே.பட் பெயரை 3 முறை பரிந்துரை செய்த கொலீஜியம்
Feb 05, 2020 8:12 AM
உயர்நீதிமன்ற நீதிபதியாக கர்நாடகத்தின் சட்ட அதிகாரி பி.கே.பட்டை (P.K. Bhat ) நியமனம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு மூன்று ஆண்டுகளில் மூன்று முறை செய்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதன்முதலாக பட்டின் பெயரை 2016ம் ஆண்டில் கொலீஜியம் பரிந்துரை செய்தது.அப்போதைய சட்ட அமைச்சகம் பட்டுக்கு எதிராக பாலியல் புகார் உள்ளதாக தெரிவித்து அதனை நிராகரித்தது.
இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அப்போதே விளக்கம் கோரியிருந்தார்.ஆனால் அந்த பாலியல் புகார் உண்மையானதல்ல என்றும் அந்தப்பெண் தன் சொந்த ஆதாயத்திற்காக புகார் அளித்ததாக கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம் அளித்திருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் 2017ம் ஆண்டு கொலீஜியம் இரண்டாவது முறையாக பட்டின் பெயரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் மீண்டும் மத்திய அரசு அதனை நிராகரித்து புகார் தீவிரமானது என்பதால் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது.
கடந்த 2018ம் ஆண்டில் 3 நபர் நீதிபதிகள் அமர்வு பட் மீதான புகாரை விசாரித்தது. மூன்றில் இரண்டு நீதிபதிகள் பட் மீது புகார் பாலியல் புகார் அல்ல என முடிவு செய்ததை அடிப்படையாக கொண்டு மீண்டும் 2019ம் ஆண்டில் மூன்றாவது முறையாக பட்டின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அதனை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால் பட் நீதிபதியாக நியமிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.