திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-லிருந்து 2015 வரை செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது தனது துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் தரக்கோரி செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தான் தலைமறைவாக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைக்க நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது.