​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி சுமார் ரூ.8 லட்சம் மோசடி

Published : Feb 04, 2020 7:26 PM

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி சுமார் ரூ.8 லட்சம் மோசடி

Feb 04, 2020 7:26 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, சுமார் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைதுசெய்தனர்.

பேஸ்புக்கில் அந்த விளம்பரத்தை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், பேரிகை என்ற பகுதிக்கு சென்று, தங்கம் வாங்குவதற்காக சுமார் 8 லட்ச ரூபாய் பணத்தை அக்கும்பலிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அக்கும்பலை சேர்ந்த சிலர் ஏற்கெனவே திட்டமிட்டபடி போலீஸ் போல உடையணிந்து, சைரன் வைத்த காரில் அங்கு வந்தனர். இதையடுத்து பயந்து ஓடுவதுபோல நடித்த அக்கும்பல், அங்கிருந்து தப்பியோடியது.

2 மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்த போலீசார், 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இக்கும்பல் இதுபோல பல மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.