தமிழக தட்பவெப்ப நிலைக்கு கொரோனா பரவாது என்று ஒரு கருத்து இருப்பதாகவும் ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் பேசிய அவர், உலக சுகாதார நிறுவனம் கூறுவதன்படி, அறுபது வயதுக்கு மேல் இருப்பவர்கள் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டால் ஆபத்து அதிகம் என்று குறிப்பிட்டார்.
மது அருந்துபவர்களை கொரானா தாக்காது என்ற கருத்து ஏற்புடையதல்ல என தெரிவித்த அமைச்சர், கொரானா குறித்து சமூக வளைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வழிகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்ற போதிலும் சிறப்பு சிகிச்சை அறைகள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 10 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.