ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் இசு ஷாபோடன்(Izu Shaboten) மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய எலி வகை பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது.
35 முதல் 65 கிலோ வரை எடை கொண்ட கேபிபராஸ் என்ற வகையைச் சேர்ந்த இந்த எலிகளுக்கு ஜப்பானில் நிலவும் கடும் குளிரை சமாளிக்கும்பொருட்டு 2 முறை சூடுநீர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அப்போது அவை செய்யும் சேட்டைகளை காண்பதற்காக வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்கியோவில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் மிருகக்காட்சி சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.