​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவைரஸ் தாக்குதல் எதிரொலி : வெறிச்சோடி காணப்படும் மக்காவ் நகரம்

Published : Feb 04, 2020 5:11 PM

கொரோனாவைரஸ் தாக்குதல் எதிரொலி : வெறிச்சோடி காணப்படும் மக்காவ் நகரம்

Feb 04, 2020 5:11 PM

ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள மக்காவ், கொரோனா தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.

சூதாட்டங்களுக்கு பெயர் போன மக்காவ் இப்போது கொரோனாவின் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளது. பெரும்பாலான கேளிக்கை விடுதிகளும், வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ள நிலையில், அரிதாக அவ்வப்போது மாஸ்க் அணிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தெர்மல் கேமராக்களின் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்த மக்காவ் நகரில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் வருகை 87 சதவிகிதம் குறைந்து விட்டது. பாதுகாப்பு ஆடை அணிந்த சுகாதாரப் பணியாளர்களும், சைரன்களுடன் சுற்றும் ஆம்புலன்சுகளும் மட்டுமே இப்போது மக்காவ் நகரின் அடையாளங்களாக மாறியுள்ளன